அமிர்த காலத்தைவிட தற்போதைய தேவை மாணவர்களுக்கான காலமே – மல்லிகார்ஜுன கார்கே

அமிர்த காலத்தைவிட தற்போதைய தேவை மாணவர்களுக்கான காலமே – மல்லிகார்ஜுன கார்கே

அமிர்த காலத்தைவிட தற்போதைய தேவை மாணவர்களுக்கான காலமே என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆண்டு கல்வி அறிக்கையின்படி, 14 முதல் 18 வயது வரை உள்ள கிராமப்புற மாணவர்களில் 56.70% பேருக்கு மூன்றாம் வகுப்பு கணக்குகளைப் போட முடிவதில்லை; 26.50% பேருக்கு தங்கள் தாய்மொழியில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களை சரளமாக படிக்க முடிவதில்லை. 17 வயது முதல் 18 வயது வரை உள்ள இளைஞர்களில் 25% பேர் ஆர்வமின்மை காரணமாக கல்வி கற்பதை நிறுத்திவிடுகிறார்கள். 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு தினசரி பயன்பாட்டில் உள்ள கணக்குகளைக் கூட போட முடிவதில்லை.

பெரும்பாலான கற்றல் குறியீடுகள் கரோனா பெருந்தொற்று காலத்துக்கு முந்தைய காலத்தைவிட மோசமாக உள்ளது. அமிர்த காலத்தைவிட தற்போதைய தேவை மாணவர்களுக்கான காலமே. மோடி அரசாங்கத்திடம் இருந்து மாணவர்களுக்கு நியாயம் கிடைப்பதை 2024 உறுதி செய்யும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக காணொளி ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This