“எங்கள் பிரதான எதிரி தென் கொரியா” – கிம் ஜாங் உன்
வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் “சுப்ரீம் பீபிள்’ஸ் அசெம்பிளி” எனும் வட கொரிய பாராளுமன்றத்தில் கிம் உரையாற்றினார். அதில் தென் கொரியாவுடனான உறவு குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது கிம் கூறியதாவது:
தென் கொரியாதான் எங்கள் முதல் எதிரி. ஒரு வேளை போர் தேவைப்பட்டால் அதை தவிர்க்க கூடாது.
தென் கொரியாவுடன் இணைப்புக்கு இனி சாத்தியமில்லை.
வட கொரியாவிற்கு பிரதான எதிரி தென் கொரியாதான் என வலியுறுத்தும் வகையில் வட கொரிய மக்களுக்கு கற்பிக்க வேண்டும். இதற்காக தேவைப்பட்டால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும்.
இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைகள் சரியான முறையில் வரையறுக்கப்பட வேண்டும்.
நாம் போரை விரும்பவில்லை; ஆனால், தேவைப்பட்டால் ஈடுபட தயங்கவே கூடாது.
தென் கொரியா முழுவதையும் ஆக்கிரமிக்க வட கொரியா தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். அவர்கள் நமது உடன்பிறப்புகள் அல்ல.
இரு நாடுகளுக்கிடையேயான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கு இடையே ஒற்றுமை ஏற்படுத்த முனைந்து வந்த 3 அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு கிம் தடை விதித்துள்ளார்.
கிம் ஜாங் உன் தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்வினையாக, “வட கொரியா தாக்குதலில் ஈடுபட்டால், பல மடங்கு வலிமையுடன் எதிர் தாக்குதலில் ஈடுபடுவோம்” என தென் கொரியா தெரிவித்தது.
தென் கொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வலுப்பெற்று வரும் உறவை கண்டு கிம் அச்சப்படுவதாக சில அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.