உலக வாழ் தமிழர்கள் இன்றைய தினம் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர்!

உலக வாழ் தமிழர்கள் இன்றைய தினம் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர்!

மனிதக் குலத்தின் மாண்பை நிலைநாட்டும் நன்றியுணர்வுக்கு மகுடம் சூட்டும் திருநாளாகத் தமிழர்களின் தைத்திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில், இன்றைய தினம் தைப்பொங்கலை கொண்டாடும் அனைவருக்கும் சூரியனின் செய்திப்பிரிவு தமது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கின்றது.

உழைக்கும் மக்களின் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்குமான ஒரு நன்றியறிதலாகக் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

மனிதக் குலத்திலிருந்து மறைந்து கொண்டிருக்கும் நன்றியுணர்வு என்ற மாண்புமிக்க அம்சத்தை வருடத்தில் ஒருமுறை பரீட்சித்துப் பார்க்கும் நாளாகத் தைப்பொங்கல் அல்லது சூரியப்பொங்கல் அமைகிறது.

பொங்கல் பண்டிகையானது இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென்னாபிரிக்கா, மொரீசியஷ் என தமிழர்கள் செறிந்து வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

இந்தநிலையில், உழவர் திருநாளான தைத்திருநாள், மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில், உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகத்தால் கொண்டாடப்படும் ஒரு செழிப்பான அறுவடைத் திருவிழாவாக பொங்கல் காணப்படுகின்றது.

வீழ்ச்சி கண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் விவசாயத்தின் மீது பாரிய நம்பிக்கை உள்ளது.

விவசாயத்தை நவீனமயப்படுத்துவதன் மூலம் நாடளாவிய ரீதியில் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தத் தேவையான திட்டங்களை அரசாங்கம் தற்போது செயற்படுத்த ஆரம்பிக்க வேண்டும்.

அந்த அனைத்து பணிகளும் வெற்றியளிக்க இந்த முறை தைப்பொங்கல் தினத்தில் இயற்கையின் ஆசிர்வாதம் கிட்ட வேண்டுமென பிரார்த்திப்பதாக இலங்கை மக்கள் நம்புகின்றனர்.

இதேவேளை, இந்து கலாசாரத்தின் மேன்மையை வெளிப்படுத்தும் தேசிய பண்டிகையான ’தைப்பொங்கல்’ விவசாய பாரம்பரியத்தின் அடிப்படையில் அமைதி, ஒற்றுமை மற்றும் அன்பு ஆகிய அடிப்படைப் பெறுமானங்களை உள்ளடக்கியுள்ளதாகவும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This