அமெரிக்க கப்பலை கைப்பற்றிய ஈரான்!
ஓமன் நாட்டின் கடலில் சென்று கொண்டிருந்த அமெரிக்காவுக்கு சொந்தமான ‘செயின்ட் நிக்கோலஸ்’ என்ற கப்பலை ஈரான் கடற்படை நேற்று பறிமுதல் செய்தது.
இது குறித்து ஈரான் இராணுவம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
” ‘சூயஸ் ராஜன்’ என்ற பெயரிடப்பட்ட சரக்கு கப்பல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்க வழிகாட்டுதலின் கீழ் ஈரான் சரக்கு கப்பலில் இருந்து எண்ணெயை திருடியது என குற்றம் சாட்டப்பட்டது.
ஈரானிய எண்ணெய் பின்னர் அமெரிக்க துறைமுகங்களுக்கு மாற்றப்பட்டு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு பதிலடியாக ஓமன் கடலில் எண்ணெய் ஏற்றிச் சென்ற அமெரிக்காவின் ‘செயின்ட் நிக்கோலஸ்’ கப்பலை ஈரான் கடற்படை கைப்பற்றியுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் கைப்பற்றப்பட்டதற்கு வெள்ளை மாளிகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
“கப்பலை கைப்பற்றுவதற்கு எந்த நியாயமும் இல்லை. அவர்கள் அதை விட்டுவிட வேண்டும்” என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி கூறினார்.