ஆப்பிளை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது மைக்ரோசாப்ட்!

ஆப்பிளை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது மைக்ரோசாப்ட்!

மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகின் மதிப்பு மிக்க நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. சத்ய நாதெல்லா தலைமை வகிக்கும் நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆப்பிளை பின்னுக்குத் தள்ளி சந்தையில் அதிக மதிப்பு மிக்க நிறுவனம் என்ற அந்தஸ்த்தை எட்டியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி மைக்ரோசாப்ட் சந்தை மதிப்பு 2.87 டிரில்லியன் டொலர்கள் ஆகும். முன்னதாக 2018 மற்றும் 2021 ஆண்டுகளில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இதே போன்று உலகின் மதிப்பு மிக்க நிறுவனம் என்ற நிலையை எட்டியது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் இந்த அந்தஸ்த்தை பெற்றிருக்கிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூடிங் பிரிவான அஸ்யூர் அதிக வருவாய் ஈட்டிக் கொடுத்ததே அந்தஸ்த்து அதிகரிக்க முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அமேசான் வெப் சேவைகளுக்கு கடும் போட்டியாளரான அஸ்யூர் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 40 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது.

கிளவுட் கம்ப்யூடிங் பிரிவில் மைக்ரோசாப்ட் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கும் என்றும், இதன் சந்தை மதிப்பு மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகம் என தெரிகிறது. இதேபோன்று செயற்கை நுண்ணறிவு மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்களிலும் கவனம் செலுத்தும் போது மைக்ரோசாப்ட்-இன் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

CATEGORIES
TAGS
Share This