வருடாந்தம் 5 வீதமான சிறுவர்களுக்கு புற்றுநோய்!

வருடாந்தம் 5 வீதமான சிறுவர்களுக்கு புற்றுநோய்!

சர்வதேச சிறுவர் புற்றுநோய் தடுப்பு தினம் இன்றாகும்.

சிறுவர்களிடையே ஏற்படும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 15 ஆம் திகதி சர்வதேச சிறுவர் புற்றுநோய் தடுப்பு தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

2030 ஆண்டுக்குள் 60 சதவீதமான சிறுவர்களை புற்றுநோயிலிருந்து பாதுகாப்போம், பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தேவையான சிகிச்சையளிப்போம் என்பதே இந்த வருடத்திற்கான தொனிப்பொருளாகும்.

ஒவ்வொரு வருடமும் உலகளாவிய ரீதியில் 4,000,000 இற்கும் அதிகமான சிறுவர்கள் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு வகையான புற்றுநோய்கள் காணப்பட்டாலும் சிறுவர்கள் மத்தியில் லுகேமியா எனும் புற்றுநோய் அதிகமாக காணப்படுவதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் நாளாந்தம் 1, 000 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

சிறுவர்கள் மத்தியில் ஏற்படும் புற்றுநோய்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடிந்தாலும், பெற்றோர்கள் மத்தியில் போதுமானளவு விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் சிகிச்சையின்றி அதிகளவான சிறுவர்கள் உயிரிழக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This