ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!

ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவு ஆசிரியர்களுக்கு வழங்கப்படமாட்டாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைச்செலவுக்கான 10,000 ரூபாய் கொடுப்பனவில் இருந்து 5,000 ரூபாவை இந்த மாதத்திலிருந்து வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அத்துடன், ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு குறித்து அரச நிர்வாக அமைச்சினால் இதுவரை எந்தவித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This