வட மாகாண பொங்கல் விழா 16ஆம் திகதி கிளிநொச்சியில்!

வட மாகாண பொங்கல் விழா 16ஆம் திகதி கிளிநொச்சியில்!

வடக்கு மாகாண பொங்கல் விழா எதிர்வரும் 16ஆம் திகதி கிளிநொச்சி பல்லவராயன்கட்டில் நடைபெறவுள்ளது.

வடக்கு மாகாண கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்தப் பொங்கல் விழாவில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்தப் பொங்கல் நிகழ்வில் சம்பிரதாயபூர்வமாகப் புதிர் எடுத்து பொங்கல் இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து பாரம்பரிய கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

CATEGORIES
TAGS
Share This