திருகோணமலை, தம்பலகாமத்தில் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம்!

திருகோணமலை, தம்பலகாமத்தில் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம்!

திருகோணமலை மாவட்டத்தில் கனமழை காரணமாக தம்பலகாமம் பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

தொடர்ச்சியான அடை மழை காரணமாக பாலம்போட்டாறு, பத்தினிபுரம், இக்பால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் அன்றாட இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் குளத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதனால் நீர் அதிகமாக வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை உரிய அதிகாரிகள் பெற்றுத்தருவதற்கு முயற்சிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This