வவுனியாவில் கிணற்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

வவுனியாவில் கிணற்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

வவுனியா, வீரபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது நேற்று (16) காலை மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய செபமாலை மொரிசன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வவுனியா- செட்டிகுளம், வீரபுரம் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றுக்குள் ஏற்பட்ட வாய்தர்க்கத்தையடுத்து கணவனான இளம் குடும்பஸ்தர் வீட்டில் இருந்த கிணற்றுக்குள் குதித்துள்ளார்.

இந்நிலையில் சடலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டதுடன், அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை  செட்டிகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This