காதல் திருமணம் செய்த மகளை குழந்தையுடன் கொன்ற குடும்பத்தினர்!
பிகாரில் உள்ள பகல்பூரில் காதல் திருமணம் செய்துகொண்ட மகளை, அவரது கணவர் மற்றும் 2 வயது குழந்தையுடன் சேர்த்து கொலை செய்த தந்தையையும் சகோதரனையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்ட சாந்தினி குமாரி, அவரது கணவர் சாந்தன் குமார், அவர்களது இரண்டு வயது குழந்தை ரோஷினி குமாரி ஆகியோரை பெண்ணின் தந்த பப்பு சிங் மற்றும் தீரஜ் குமார் ஆகியோர் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கடந்த செவ்வாய்கிழமை மாலை 4.25 மணியளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த மூவரையும் வழிமறைத்து, இரும்புக் கம்பியால் அடித்து பின் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
சம்பவ இடத்தில் உயிரிழந்த மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக துணைப் பிரிவி காவல் அதிகாரி ஓம் பிரகாஷ் அருண் தெரிவித்துள்ளார்.