கடல் அட்டைகளை கடத்திய ஆறு பேர் கைது!

கடல் அட்டைகளை கடத்திய ஆறு பேர் கைது!

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 2,032 கிலோ கிராம் கடல் அட்டைகள் கற்பிட்டி உச்சமுனை பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய கடற்படையினரால் உச்சமுனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கடல் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது, 71 உரப் பைகளில் 2032 கிலோ கிராம் கடல் அட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

மேலும், இந்த கடல் அட்டைகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட மூன்று டிங்கி இயந்திர படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அதில் பயணம் செய்த ஆறு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஆறு பேரும் 21 வயது முதல் 43 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் கற்பிட்டி மற்றும் தலவில பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கடற்பையினர் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஆறு பேரும், கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் மூன்று டிங்கி இயந்திர படகுகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This