மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிர்மல் சிங், சித்ரா சர்வாரா!

மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிர்மல் சிங், சித்ரா சர்வாரா!

அரியானா மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் நிர்மல் சிங் மற்றும் அவரது மகள் சித்ரா சர்வாரா ஆகியோர் கடந்த மாதம் அக்கட்சியில் இருந்து விலகினர்.

இருவரும் தங்களது எழுத்துப்பூர்வ ராஜினாமா கடிதத்தை ஆம் ஆத்மி அரியானா தலைவரிடம் சமர்ப்பித்தனர். இதற்கிடையே, அவர்கள் விரைவில் காங்கிரசில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், நிர்மல் சிங் மற்றும் அவரது மகள் சித்ரா சர்வாரா ஆகியோர் தலைநகர் டெல்லியில் அரியானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தீபக் பார்பாரியா மற்றும் மாநில தலைவர் உதய் பான் முன்னிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

CATEGORIES
TAGS
Share This