13ஆவது திருத்தத்தில் அரசாங்கம் தலையிடாது : ஜனாதிபதி

13ஆவது திருத்தத்தில் அரசாங்கம் தலையிடாது : ஜனாதிபதி

மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது எனவே, அவற்றில் மத்திய அரசாங்கம் தலையிடாது. என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்.மாவட்ட தொழில் வல்லுனர்களுடனான சந்திப்பில் வலியுறுத்தினார்.

மேலும் மாகாண மட்டத்தில் சுயாதீன பொருளாதாரத்தை உருவாக்குவது தொடர்பிலான தெரிவை ஜப்பான், கொரியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் போன்ற நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, தற்போது மேல்மாகாணத்திற்கு மட்டுமே நிதி சுதந்திரம் காணப்படுவதாகவும், 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தங்களது மாகாணத்தின் அபிவிருத்திக்காக அனைத்து மாகாணங்களும் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

CATEGORIES
TAGS
Share This