யாழில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்!

யாழில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக யாழ். பழைய பூங்கா அருகில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவதுதான் வீதித் தடைகளை அமைத்து போராட்டகாரர்களை தடுத்து வைத்துள்ளனர்.

அத்துடன் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூவரை பொலிஸாரால் கைது செய்துள்ளனர் என தெரிவிக்கபப்டுகின்றது.

இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்துக்கு வெளியே நீர்த்தாரை பிரயோகிக்கும் இயந்திரம், கலகமடக்கும் படை, பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (04) உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் வருகைதரும் ஜனாதிபதி மாலை 3 மணி முதல் 5.30 வரை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This