இலங்கை முழுவதும் விசேட டெங்கு ஒழிப்பு தடுப்பு வாரத்தை பிரகடனப்படுத்த நடவடிக்கை!

இலங்கை முழுவதும் விசேட டெங்கு ஒழிப்பு தடுப்பு வாரத்தை பிரகடனப்படுத்த நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் விசேட டெங்கு தடுப்பு வாரத்தை பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்போதுள்ள டெங்கு அபாயத்தை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் பாலித மஹிபால தலைமையில் சுகாதார அமைச்சில் ஆரம்பமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், பொலிஸ் மற்றும் முப்படைகளின் தலைவர்கள், டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மாவட்ட மட்டத்தில் இன்று (04.01) முதல் டெங்கு நுளம்பு ஒழிப்பு குழுக்களை ஸ்தாபிக்கவும் எதிர்வரும் 07 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள சகல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களையும் மையப்படுத்தி விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2023 ஆம் ஆண்டில் 88,398 டெங்கு நோயாளர்கள் மற்றும் 58 இறப்புகள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

சுகாதார வைத்திய அதிகாரிகளின் 71 பிரிவுகள் அதிக ஆபத்துள்ள வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சமூகத்தில் பதிவாகும் டெங்கு நோயாளர்களை விட அதிகமானோர் இருக்கலாம் என டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This