கிளிநொச்சியில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள்!

கிளிநொச்சியில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள்!

கிளிநொச்சி – புதுமுறிப்பு குளத்தில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மீன் குஞ்சுகளை விடும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்றைய தினம் (16.01.2024) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றுள்ளது.மீனவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க குளத்தில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மீன் குஞ்சுகள் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக விடப்பட்டுள்ளன.தேசிய நன்னீர் மீன் உற்பத்தியினை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பு மற்றும் போசனையை உறுதி செய்யவும் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தினை வளப்படுத்துவதையும் நோக்காக கொண்டே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This