நாளொன்றுக்கு 160 மில்லியன் ரூபாய் கூடுதல் வரி!

நாளொன்றுக்கு 160 மில்லியன் ரூபாய் கூடுதல் வரி!

புதிய வெற் வரி திருத்தங்கள் காரணமாக, ஜனவரி 1 ஆம் திகதியிலிருந்து நாளொன்றுக்கு 160 மில்லியன் ரூபாய் கூடுதல் வரி வருவாயை இலங்கை மதுவரித்திணைக்களம் வசூலிக்க வேண்டியுள்ளது.

எனினும் பல உயர்மட்ட பணியாளர்கள் உள்ளிட்டோர் விரைவில் ஓய்வு பெறவுள்ளமையால் இந்த திட்ட இலக்கில் பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த மூன்று மாதங்களில் திணைக்களத்தின் பெருமளவான பணியாளர்கள் வயது வரம்பின் அடிப்படையில் ஓய்வு பெறப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மூன்று முக்கிய வருவாய் ஈட்டும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் மதுவரித்திணைக்களம் ஏற்கனவே உயர்மட்ட அதிகாரிகளுக்கான கடுமையான பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.

இந்தநிலையில் அதன் தலைவர் மற்றும் மதுவரித்திணைக்கள ஆணையாளர் உட்பட பலர் எதிர்வரும் மார்ச் மாதத்துடன் 60 வயது நிறைவடைந்தவுடன் பணிகளில் இருந்து ஓய்வுப்பெறவுள்ளனர்.

ஓய்வுப்பெறப்போகும் இந்த உயர்மட்ட பணியாளர்கள் அனைவரும் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்கள்.

அவர்கள் அனைவரும் அடுத்த மூன்று மாதங்களில் ஓய்வு பெறும்போது, சமீப காலத்தில் தரவரிசையில் இருந்து பதவி உயர்வு பெற்ற எஞ்சிய புதிய உதவி ஆணையர்களால் செயற்பாடுகள் முன்கொண்டு செல்லப்பட வேண்டும்.

இது திணைக்களத்தின் கட்டமைப்புக்கு பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் என திணைக்கள தரப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This