பொது கழிப்பறை கட்டணமும் அதிகம்!

பொது கழிப்பறை கட்டணமும் அதிகம்!

வாட் வரி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், பொது கழிப்பறைகளுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, பொதுக் கழிப்பறைகளுக்கான 10.00 ரூபா கட்டணம் 20.00 ரூபாயாகவும், 20.00 ரூபாவாக இருந்த கட்டணம் 30.00 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட் வரியுடன் சேர்த்து குடிநீர் கட்டணமும் அதிகரித்துள்ள நிலையில், பொது கழிப்பறைகளுக்கான கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று (01) முதல் அரசாங்கம் VAT வரியை 18% ஆக உயர்த்தியுள்ளதுடன், இதன் காரணமாக பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளன.

CATEGORIES
TAGS
Share This