கொழும்பில் பாரியளவான போதைப்பொருள் மீட்பு ; ஒருவர் கைது!

கொழும்பில் பாரியளவான போதைப்பொருள் மீட்பு ; ஒருவர் கைது!

பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முகத்துவாரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவரிடம் இருந்து 1.5 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 7 கிலோ கிராம் கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது போதைப்பொருள் தயாரிப்பிற்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருட்களையும், அவற்றை பதப்படுத்த பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இயந்திரத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This