இன்றைய ராசிபலன் – 02.01.2024
மேஷம்: அனைத்து வகையிலும் வெற்றி கிடைக்கும். எதிரிகள் கனிவாக பேசி சமாதானத்துக்கு வருவார்கள். குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நல்ல செய்திகள் வந்து சேரும். வாகனப் பழுது நீங்கும்.
ரிஷபம்: பழைய உறவினர்கள் வீடு தேடி வந்து பேசுவர். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவர். வியாபாரத்தில் போட்டி விலகி முன்னேற்றத்துக்கான வழி கிடைக்கும். நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.
மிதுனம்: தம்பதிக்குள் இருந்து வந்த சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் வரும். வருமானத்தை பெருக்க வழி கிடைக்கும். கலை பொருட்கள் சேரும். சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ளவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கடகம்: அனைத்து கனவுகளும் நிறைவேறும். புது முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். கணவன் – மனைவிக்குள் இருந்த கசப்புகள் விலகும். அலைச்சல் குறையும். வியாபாரரீதியாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும்.
சிம்மம்: உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு உண்டு. வாயுக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், உணவில் கட்டுப்பாடு அவசியம். வாகனம் செலவு வைக்கும்.
கன்னி: அனைவரிடத்திலும் இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பேச்சைக்கேட்டு பொறுப்பாக நடந்து கொள்வர். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். முகப்பொலிவு கூடும்.
துலாம்: உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். புதிய பதவிகள் தேடி வரும். பழைய வழக்குகள் சாதகமாகும். மகிழ்ச்சிகரமான சூழல்கள் நிலவும். உத்தியோகத்தில் ஊழியர்கள் ஆதரவாக இருப்பர்.
விருச்சிகம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர். பொறுப்புகள், பதவிகள் தேடிவரும். பிரபலங்கள் அறிமுகமாவர். குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு செல்ல திட்டமிடுவீர்கள்.
தனுசு: தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் கைகூடி வரும். ஓரளவு பணவரவு உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்தை அதிக செலவு செய்து சீரமைப்பீர்கள். வாகனப் பழுது சரியாகும்.
மகரம்:முன்கோபத்தை குறைப்பது நல்லது. உடல் நலக்குறைவு ஏற்படும். எந்த விஷயத்தையும் திட்டமிட்டு செய்யப் பாருங்கள். அடுத்தவர்கள் விவகாரத்தில் அநாவசியமாக மூக்கை நுழைப்பதைத் தவிர்க்கவும்.
கும்பம்: உடன்பிறந்தவர்களின் ஆதரவால் சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். இல்லத்தில் வசதி பெருகும்.
மீனம்: தொட்டது துலங்கும். தெளிவு பிறக்கும். அனுபவப்பூர்வமாகப் பேசுவீர்கள். பழைய கடனை பைசல் செய்ய புதுவழி பிறக்கும். உடன் பிறந்தவர்கள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிப்பர். புதிய வாகனம் வாங்குவீர்கள்.