புத்தாண்டு தினத்தன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 156 பேர் பலி!

புத்தாண்டு தினத்தன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 156 பேர் பலி!

புத்தாண்டின் முதல் நாளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 156 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் புத்தாண்டு பண்டிகை நேற்று (01) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காஸா எல்லையில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

காஸாவின் ஜபாலியா பகுதியை நோக்கி இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது. இதேபோன்று மத்திய காஸாவிலுள்ள மகாஸி முகாம் மீதும் ரஷ்ய இராணுவம் தாக்குதல் நடத்தியது.

மூன்றாம் கட்டப்போருக்கு ஆயத்தமாகும் வகையில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய இந்த தாக்குதலில், கடந்த 24 மணிநேரத்தில் 156 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 246 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் முதல் பாலஸ்தீனத்தில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 21,978 ஆக அதிகரித்துள்ளது. 56,697 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனை காஸா சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This