ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தயார்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கம் எடுக்கும் சரியான தீர்மானங்களுக்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது மதிப்பாய்வில் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் நாட்டிற்கு 300 மில்லியன் டொலர்கள் கிடைக்கும், இது நாட்டுக்கு மிகவும் நல்லது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி உரிய முறையில் நிர்வகித்து வருவதாகவும் அது சாதகமான அறிகுறி எனவும் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, ஜனாதிபதி மேற்கொள்ளும் நாட்டிற்கு முக்கிய நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தமது கட்சி தயாராகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.