உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர்கள் வெளிநாடு செல்ல தடை உத்தரவு?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர்கள் வெளிநாடு செல்ல தடை உத்தரவு?

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் உள்ளிட்ட பல குற்றங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக வெளிநாடு செல்ல தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த மூன்று சந்தேக நபர்களில் ஒரு பாதுகாப்புத் உயர் அதிகாரியும், இரண்டு மாகாண மட்ட அரசியல்வாதிகள் உள்ளடங்குவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணை முடிவுகளின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான குற்றச் செயல்களின் முழுமையான விசாரணை அறிக்கை இந்த வாரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ள பாதுகாப்புத் அதிகாரி இராணுவத்தில் கடமையாற்றி தற்போது ஓய்வுபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், எதிர்வரும் காலங்களில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள விசாரணை அறிக்கையின் பிரகாரம் இவர்களை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள குற்றப் புலனாய்வு திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

CATEGORIES
Share This