ஜே.வி.பி. குறித்து தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்- வடமராட்சியில் கஜேந்திரன் தெரிவிப்பு!

ஜே.வி.பி. குறித்து தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்- வடமராட்சியில் கஜேந்திரன் தெரிவிப்பு!

ஜே.வி.பி. தொடர்பாக தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலளரும் அந்தக் கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற

ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிரான, தாயகம், சுயநிர்ணய உரிமைகளுக்காகப் போராடும் ஒரே தலைமை நாம்தான்.

ஏனைய அரசியல் கட்சிகளும், குழுக்களும் 13 ஆவது திருத்தச் சட்டம் வலியுறுத்துகின்ற ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டவர்களே!

கடந்த 15 ஆண்டுகளுக்பு மேலாக சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வருகின்ற தரப்பு கஜேந்திரகுமார் அணி மாத்திரமே. தமிழ்த் தேசிக் கூட்டமைப்பாக முன்னர் இருந்த சித்தார்த்தன், அடைக்கலநாதன் தொடக்கம் சுமந்திரன் வரை ஐ.நாவிலே உள்ளகப் பொறிமுறைக்காகப் பேசியவர்கள், 13ஐ ஏற்றுக்கொண்டு மாகாண சபைத் தேர்தலை அங்கும் வலியுறுத்திய தரப்புக்களே அவை.

நூற்றுக்கணக்கான குழுக்களும் அரசியல்க கட்சிகளும் பிரிந்து இருந்தாலும் கூட இந்கக் கொள்கை என்று வருகின்றபோது இரண்டே இரண்டு நிலைப்பாடுகள்தான் உள்ளன. பொறுப்புக்கூறல் மற்றும் தீர்வு விடயங்களிலும் இரண்டே இரண்டு நிலைப்பாடுகள்தான் இருக்கின்றன.

தீர்வை விடயத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியினர் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ் வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே உள்ளது.

ஏனைய அனைத்துத் தரப்பினரும் ஒற்றையாட்சிக்குள் 13ஐ அல்லது ஏக்கிய இராட்சியத்தை ஏற்றுக்கொண்ட தரப்பினரே! அது தமிழசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திலே வருகின்ற சுமந்திரன், சிறீதரன் அணிகளாக இருக்கலாம் அல்லது சங்குச் சின்னத்தில் வருகின்ற சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச் சந்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சியாக இருக்கலாம் அல்லது மான் சின்னத்திலே வருகின்ற பார் விக்னேஸ்வரன் கும்பலாக இருக்கலாம். அனைவருமே இந்த 13 மற்றும் ஏக்கிய இராட்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள். எல்லோரும் உள்ளக விசாரணையைக் கோருபவர்கள். இனப்படுகொலையாளிகளுக்கு எதிராக சர்வதேச விசாரணையை வேண்டாம் என்று கூறுபவர்கள்.

இந்த விடயத்திலே இங்கு எம் மீது நடத்தப்பட்டது ஒரு இனப்படுகொலை, இனப்படுகொலைக்குச் சர்வதேச விசாரணை வேண்டும் என்று வலியுறுத்துகின்ற ஒரேயொரு தரப்பாக சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாம் சார்ந்த அணி மாத்திரம் தான்.

ஆகவே, இந்த இரண்டே இரண்டு நிலைப்பாடுகள்தான் இருக்கின்றன. குறிப்பாக இத்தனை கட்சிகளும், குழுக்களும் அரசினால் திட்டமிடப்பட்டு இறக்கப்பட்டுள்ளன.

கொள்கையோடு உள்ள கஜேந்திரகுமார் அணியினரை மக்கள் கண்டுவிடக் கூடாது , அதைக் குழப்பட வேண்டும் என்பதற்காக மட்டும்தான் இத்தனை கட்சிகளும், குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளன.

ஆகவே, இதனை மக்கள் விளங்கிக் கொண்டு அனைத்துத் தரப்புக்களையும் புறக்கணிக்க வேண்டும். ஜே.வி.பி. தொடர்பாக தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

1994 ஆம் ஆண்டில் இருந்து தொடர்சியாகத் தொடர் குற்றச் செயல்கள் புரிந்து ஆட்சியாளர்களுடன் இணைந்து இந்த நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு வந்த ஈ.பி.டி.பியை ஜனாதிபதி அநுர அணைக்கின்றார் என்றால் இதற்குப் பிறகும் வடக்கு, கிழக்கில் அநுர ஊழலைக் கட்டுப்படுத்துவார் என்று நாங்கள் யாராவது நம்புவோமாக இருந்தால் எம்மைப் போன்ற அடிமுட்டாள்கள் வேற யாரும் இருக்க முடியாது.

ஆகவே, இனியும் தமிழ் மக்கள் ஏமாறாமல் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்குப் பின்னால் அணிதிரளுமாறு நாம் விநயமாகக் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.

CATEGORIES
Share This