தனக்கு 5 மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டது

தனக்கு 5 மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டது

தான் பிரதமராக இருந்த காலத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஒரு திட்டத்துக்காக தனதுக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாக கொடுக்க முயன்றதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

ஊழலுக்குப் பழக்கப்பட்ட பெரியவர்களின் மனதை மாற்றுவது சாத்தியமில்லை என இதன்போது தெரிவித்த அவர், சிறு வயதிலிருந்தே விழுமியங்களை வடிவமைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அத்துடன், எங்களிடம் ஒரு ஜனாதிபதி இருந்தார், அவர் உங்களால் முடிந்தவரை திருடுங்கள், ஆனால் பிடிபடாதீர்கள். இவ்வாறு அவர் தனது அமைச்சரவையில் தெரிவித்தார். இதை அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி எம்.பி.க்களிடம் கூறி வந்தார்.

எல்லோரும் திருடினார்கள், யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த அமைப்புதான் எமது நாட்டை சீரழித்துள்ளது.

தொழிலதிபர்கள் திட்டங்களைப் பாதுகாக்க இலஞ்சம் கொடுக்கலாம் என்றாலும், பரவலான ஊழல் இறுதியில் தேசிய வங்குரோத்து நிலைக்கு இட்டுச் செல்லும் என்றும் அவர் எச்சரித்தார்.

CATEGORIES
Share This