“லெபானானில் உள்ள ஐ.நா அமைதிப்படை வெளியேற்றப்பட வேண்டும்“: நெதன்யாகு கோரிக்கை

“லெபானானில் உள்ள ஐ.நா அமைதிப்படை வெளியேற்றப்பட வேண்டும்“: நெதன்யாகு கோரிக்கை

தெற்கு லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைகளை உடனடியாக வெளியேற்றுமாறு ஐ.நா சபையின் தலைவர் அன்டோனியோ குட்டெரஸிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலால் லெபனானில் உள்ள ஐ.நா இடைக்காலப் படையை சேர்ந்த ஐந்தாவது அமைதி காக்கும் வீரர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெய்ர் பெல்லா, அல் மய்ஸ்ரா மற்றும் பர்ஜா ஆகிய இடங்களில் இஸ்ரேல் நேற்று நடத்திய மூன்று தாக்குதல்களில் 15 பேர் உயிரிழந்ததாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லா லெபனானிலிருந்து இஸ்ரேலுக்கு சுமார் 320 ஏவுகணைகளை சனிக்கிழமை ஏவியது.

காசாவில், மத்திய மற்றும் வடக்கு காசா பகுதியில் சனிக்கிழமை மற்றும் ஒரே இரவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் சுமார் 29 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This