கோட்டாவைக் கொலை செய்யும் நோக்கிலேயே மிரிஹான இல்லத்தின் மீதான தாக்குதல் நடத்தப்பட்டன!

கோட்டாவைக் கொலை செய்யும் நோக்கிலேயே மிரிஹான இல்லத்தின் மீதான தாக்குதல் நடத்தப்பட்டன!

நாட்டில் அரகலய போராட்டம் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்தின் மீதான தாக்குதல்கள் அவரை கொலை செய்யும் நோக்கத்துடனேயே நடத்தப்பட்டதாக அவரது முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்தின் மீதான தாக்குதல் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”  அரகலய போராட்டம் முன்னெடுக்கப்பட்ட காலத்தில் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்சவுக்கான பாதுகாப்பு கேள்விக் குறியாகவே இருந்தது என்றும் அங்கு வந்திருந்த குழுவினர் கோட்டாபய ராஜபக்ஷவை வெளியேற்றும் நோக்குடன் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மாறாக அவரை கொலை செய்வதே அவர்களின் நோக்கமாக இருந்ததை தாம் நன்கு அறிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு வருகை தந்தவர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் தன்னிடம் உள்ளதாகவும் எனவே தான் தற்போதைய அரசாங்கம் ஒரு அரசியல் பழிவாங்கல் நோக்குடனேயே தாம் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்தார்.

CATEGORIES
Share This