மீண்டும் இந்தியாவுடன் கைகோர்க்கும் மாலைத்தீவு ஜனாதிபதி!

மீண்டும் இந்தியாவுடன் கைகோர்க்கும் மாலைத்தீவு ஜனாதிபதி!

மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்சு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றைய தினம் (06) இந்தியாவை வந்தடைந்தார்.

இதன்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த முய்சு, இருதரப்பு உறவுகளை மேம்படுத்த விரும்புவதாக தெரிவித்தார்.

அத்துடன் இந்தியாவுடனான உறவு மாலைத்தீவுக்கு முதன்மையானது என்றும், இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரான எந்த ஒரு செயலையும் மாலத்தீவு அனுமதிக்காது என்றும் உறுதியளித்துள்ளார்.

அதற்கு வரவேற்பு தெரிவித்த ஜெய்சங்கர் பிரதமர் மோடியுடன் இடம்பெறவுள்ள உள்ள பேச்சுவார்த்தை இருதரப்பினர் உறவையும் வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதேவேளை இன்றைய தினம் நடைபெறவுள்ள இந்தியப் பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது ”பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மாலைத்தீவின் கடன் சுமையைக் குறைக்கும் விதமாக பிரதமர் மோடியிடம் நிதியுதவி கோரவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

CATEGORIES
Share This