சமந்தாவின் முன்னாள் கணவருக்கு நாக சைதன்யாவுக்கு இரண்டாவது திருமணம்: நிச்சயதார்த்த புகைப்படங்கள்

சமந்தாவின் முன்னாள் கணவருக்கு நாக சைதன்யாவுக்கு இரண்டாவது திருமணம்: நிச்சயதார்த்த புகைப்படங்கள்

நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கு இன்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு நாக சைதன்யா இதனை உறுதி செய்துள்ளார்.
மிக விரைவில் திருமண செய்தி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நடிகை சமந்தா அறிமுகமான ஹே மாய சேசாவே (விண்ணைத்தாண்டி வருவாயா) படத்தில் இணைந்து நடித்த நாக சைதன்யா அவரை உருகி உருகி காதலித்து வந்த நிலையில் இருவரும் 2017ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர்.
ஆனால், திருமணத்துக்குப் பிறகு இருவருக்கும் இடையில் ஏகப்பட்ட சிக்கல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
2021ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

இந்நிலையில், சோபிதா துலிபாலாவை நடிகர் நாக சைதன்யா நிச்சயம் செய்துக் கொள்ளப் போவதாகவும் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடைபெறும் என தகவல்கள் கசிந்தன. இருவரும் இதைப்பற்றி வெளிப்படையாக உறுதி செய்யாத நிலையில் இன்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

CATEGORIES
Share This