கூட்டமைப்பு அல்லாது தனித்து நின்று போட்டியிட வேண்டும் என்று சொல்கின்றவர்கள் கட்சியை சிதைப்பவர்களாக இருப்பர்

கூட்டமைப்பு அல்லாது தனித்து நின்று போட்டியிட வேண்டும் என்று சொல்கின்றவர்கள் கட்சியை சிதைப்பவர்களாக இருப்பர்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றினைந்து ஒரு கூட்டமைப்பாக போட்டியிடுவதை நாங்கள் விரும்புகின்றேம். இதுவே மக்களின் விருப்பமுமாகும். தனிப்பட்ட முறையில் போட்டியிட வேண்டும் என்று சொல்கின்றவர்கள் கட்சியை வளர்ப்பதற்குரிய நோக்கமுடையவர்களாக இருக்க கட்சியை சிதைப்பதற்குரிய நோக்கமுடையவர்களாகத்தான் இருப்பார்கள் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை காலை (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

தமிழர்கள் ஒற்றுமையாக தமிழ் தேசிய கட்சிகள் ஓரணியில் ஒரு கட்சியாக தேர்தலில் முகம் கொடுக்க வேண்டும் எனும் கருத்தினை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சொல்லியிருக்கின்றார்.

உள்ளூராட்சி தேர்தலில் மாத்திரம் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் கட்சிகள் தனித் தனியாக போட்டியிட்ட பின்னர் இணைகின்ற பட்சத்தில் அதிகமான சபை ஆசனங்களை பெற முடியும் என்றும் அதன் மூலமாக சிறிலங்கா தேசிய கட்சிகளை இணைத்துக் கொள்ளாமல், தமிழ் தேசிய கட்சிகளை மாத்திரம் இணைத்துக் கொண்டு இந்த சபைகளை கைப்பற்றி பலமாக கொண்டு செல்லலாம் என செல்லப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலுக்கு மட்டும்தான் இந்த நடைமுறை சொல்லப்பட்டது. ஏனைய மாகாண சபை தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் கூட்டமைப்பாக ஒன்றிணைந்து போட்டியிடுவதுதான் தமிழ் தேசிய கட்சிகளின் விருப்பம்.

தற்போது இடதுசாரி கட்சி ஆட்சிக்கு வந்திருக்கிறது தொழிலாளர் நலன் தொடர்பாகவும் ஏழை மக்களின் நலன் பற்றி சிந்திக்கின்ற கட்சி ஆட்சிக்கு வந்திருக்கின்றது. இந்த கட்சியாவது தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். இதைவிட கடந்த காலங்களில் காணி அபகரிப்புக்கள், ஆட்கடத்தல், கொலை, கொள்ளை, கப்பம் அதே போன்று ஈஸ்டர் குண்டு தாக்குதல் இந்த விடயங்கள் எல்லாம் மக்கள் எதிர்பார்க்கும் நீதி நியாயம் உண்மை போன்றவை மக்களுக்கு கிடைக்க வேண்டும். என தெரிவித்தார்.

CATEGORIES
Share This