முன்னாள் அமைச்சர்கள் அரச வீடுகளை மீள வழங்க வேண்டும்: காலக்கெடுவும் விதிக்கப்பட்டது

முன்னாள் அமைச்சர்கள் அரச வீடுகளை மீள வழங்க வேண்டும்: காலக்கெடுவும் விதிக்கப்பட்டது

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அந்தந்த அமைச்சு பதவிகளை வகித்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்திய அனைத்து அரசாங்க வீடு மற்றும் பங்களாக்களை உடனடியாக மீள ஒப்படைக்குமாறு அரச பொது நிர்வாக அமைச்சு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சுமார் 15 பேருக்கு அரசாங்க உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றம் பங்களாக்களை ஒப்படைப்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் சில நிறுவனங்களுக்கு அரசாங்கம் 50 கொழும்பு அரச பங்களாக்களை வழங்கியிருந்தது.

இந்நிலையில், மாதிவலை உத்தியோகபூர்வ இல்லங்கள் நாடாளுமன்றத் தேர்தல் வரையில் பயன்படுத்த நாடாளுமன்ற அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறும் தினத்தில் அல்லது அதற்கு அடுத்த தினத்தில் குறித்த உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்க வேண்டும் என நாடாளுமன்ற அதிகாரிகள் முன்னாள் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ள அனைத்து விதத்திலும் வழங்கப்பட்டுள்ள கொடுபப்னவுகள், முத்திரை கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This