இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல்; 21 நாள் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு
லெபனானில் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே 21 நாள் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நட்பு நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்த போரானது பரந்த பிராந்திய விரிவாக்கத்தின் ஏற்றுக்கொள்ள முடியாத ஆபத்தை ஏற்படுத்துவதாக நட்பு நாடுகள் தெரிவித்துள்ளன.
தெற்கு லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட அண்மைய வான்வழித் தாக்குதலில் நால்வர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய தளபதி அவர்கள் லெபனான் மீது தரைவழி ஆக்கிரமிப்புக்கு தயாராகி வருவதாகக் கூறினார்.
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஒரு வருடத்தை அண்மித்துள்ளது.
ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா, பலஸ்தீனியர்களுடன் ஒற்றுமையுடன் செயல்படுவதாகக் கூறுகிறது.
ஹிஸ்புல்லாவின் அச்சுறுத்தலை நீக்கி, இடம்பெயர்ந்த மக்களை வடக்கு இஸ்ரேலுக்குத் திருப்பி அனுப்புவதை நோக்கமாகக் கொண்டதாக இஸ்ரேல் கூறுகிறது.