35 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை; பத்திரமாக மீட்ட பேரிடர் மீட்புக் குழுவினர்

35 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை; பத்திரமாக மீட்ட பேரிடர் மீட்புக் குழுவினர்

இந்தியா, ராஜஸ்தான் மாநிலம், தவுசா மாவட்டம், பாண்டூகி எனும் இடத்தில் நேற்று புதன்கிழமை மாலை 6 மணியளவில் 2 வயது பெண் குழந்தையொன்று விளையாடிக் கொண்டிருந்தது.

வெகுநேரமாகியும் குழந்தையைக் காணவில்லையென பெற்றோர் தேடியுள்ளனர்.

தொடர்ந்து குழந்தை விளையாடிக் கொண்டிருந்த இடத்துக்கருகிலுள்ள 35 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

சிறிது நேர போராட்டத்தின் பின்னர் குழந்தையை மீட்க முடியாமல் போன நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

படைவீரர்கள் நவீன கருவிகளின் உதவியுடன் ஆழ்துளை கிணற்றின் அருகில் குழி தோண்ட முயற்சித்தனர்.

தொடர்ந்து 18 மணித்தியால போராட்டத்தின் பின்னர் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

உடனடியாக குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

இதுபோன்ற பல குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழுந்து அநியாயமாக பலியான பல சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விவசாய நடவடிக்கைகளுக்காக இதுபோன்ற ஆழ்துளை கிணறுகள்ள தோண்டப்படும் பொழுது அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.

CATEGORIES
Share This