மெட்டா விளம்பரங்களுக்காக ஜனாதிபதி வேட்பாளர்கள் செய்த செலவு; சமூக ஊடகங்களில் வெளியான தகவல்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் இதுவரை மெட்டா விளம்பரங்களுக்காக செலவிட்ட தொகை தொடர்பில் சமூக ஊடகங்களில் அதிகளவு விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு தரவு அறிக்கையால், இது குறித்து பலத்த விவாதம் ஏற்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 90 நாட்களில் மெட்டா விளம்பரங்களுக்காக 33,230,360 ரூபாவைச் செலவிட்டுள்ளதாக தொடர்புடைய தரவுகள் தெரிவிக்கின்றன.
அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 32,514,220 ரூபாவையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க 7,142,795 ரூபாவையும் செலவிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ச, மெட்டா விளம்பரங்களுக்காக 8,579,955 ரூபாவைச் செலவிட்டுள்ளதாகத் தொடர்புடைய தரவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச இந்த பிரச்சாரங்கள் மற்றும் விளம்பரங்களுக்காக 665,202 ரூபாவை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மௌபிம ஜனதா கட்சியின் வேட்பாளர் திலித் ஜயவீர மற்றும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனக ரத்நாயக்க ஆகியோர் மெட்டா விளம்பரங்களுக்காக 1,907,165 ரூபாவை செலவிட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.