மணிப்பூரில் வெடிக்கும் வன்முறை: ஐவர் பலி
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் ஜிரிபாம் மாவட்டத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற வன்முறை சம்பவத்தால் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வருடம் மே மாதம் 03 ஆம் திகதி குகி பழங்குடியினர் மற்றும் மைத்தேயி சமூகங்களுக்கு இடையில் ஏற்பட்ட இனக்கலவரம் ஒரு வருடத்திற்கு மேலாக நீடித்து வருகிறது.
இந்த மோதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் வன்முறையாக மாறியுள்ளது. இம்முறை போராட்டாக்காரர்கள் ட்ரோன்கள், ராக்கெட்கள் போன்ற நவீனத் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போராட்டக்காரர்கள் குழுவொன்று கிராமத்துக்குள் புகுந்து ஒருவரைக் கொலை செய்ததைத் தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாக மணிப்பூர் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் குகி பழங்குடியினர் மற்றும் மைத்தேயி ஆகிய இரண்டு தரப்பினை சேர்ந்தவர்களும் உள்ளடங்குவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.