எனது வெற்றி உறுதி; அனுரகுமார நம்பிக்கை
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தனது வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பொது மக்களின் அசைக்க முடியாத ஆதரவை வலியுறுத்தியுள்ள அவர், இலங்கையின் எதிர்கால ஆட்சிக்கான தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,
“தேசிய மக்கள் சக்தி ஏற்கனவே வெற்றியைப் பெற்றுள்ளது. எங்கள் இலக்குகளை நோக்கி தீவிரமாக செயல்படுகின்றோம். இந்த நாட்டின் சாமானிய மக்களை எந்த திட்டங்களாலும் தடுக்க முடியாது.
எங்கள் வெற்றி உறுதியாகிவிட்டது, நாங்கள் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்,” என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, பல்வேறு அரசியல் பிரமுகர்களின் விசுவாசம் மாறிவருவதையும் அவர் கடுமையான விமர்சித்துள்ளார். மேலும், மக்களின் ஆணைக்கும் தற்போதைய நாடாளுமன்ற ஆணைக்கும் இடையிலான முரண்பாட்டை சுட்டிக்காட்டியுள்ளார்.
2020ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மக்கள் ஆணையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவை மாற்றிக் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், தனது நிர்வாகம் வலுவான அமைச்சரவையை அமைத்து புதிய நாடாளுமன்றத் தேர்தலை நடத்தும் என்று அனுரகுமார் உறுதியளித்தார்.
இதன்படி, புதிய நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கணிசமான பெரும்பான்மையைப் பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.