விஜய்யின் படம் வெற்றி பெறவும், மாநாடு சிறக்கவும் வாழ்த்துகிறோம்
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாட்டுக்கு வேண்டுமென்றே அனுமதி தர காலதாமதம் செய்கிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;-
“த.வெ.க. மாநாட்டுக்கு அனுமதி கொடுக்காமல் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு உள்பட 21 கேள்விகளை கேட்டு வேண்டுமென்றே காலதாமதம் செய்கிறார்கள்.
இதுவரை நடத்தப்பட்ட மாநாடுகளில் இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டுதான் நடத்தினார்களா?மாநாட்டை ஏற்பாடு செய்பவர்கள் அனைத்தையும் செய்வார்கள். அண்ணன்-தம்பி என்ற பாசத்தில் விஜய்யின் மாநாடு சிறக்க நான் வாழ்த்துகிறேன்.
அதேபோல், விஜய்யின் புதிய படம் வெளியாகிறது. படத்தை இயக்கியவரும், நடித்திருப்பவரும் எனது தம்பிகள்தான். படம் வெற்றி பெறவும் வாழ்த்துகிறோம்.”இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
CATEGORIES இந்திய செய்திகள்