திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: முகமூடி அணிந்த நபர்களால் பரபரப்பு

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: முகமூடி அணிந்த நபர்களால் பரபரப்பு

வடகிழக்கு பிரான்சில் இடம்பெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கி ஏந்திய முகமூடி கும்பல்
வடகிழக்கு பிரான்சில் ஞாயிறு அதிகாலையில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் மூவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

தியோன்வில் (Thionville) அருகே உள்ள ஈடன் அரண்மனை அரங்கம் வெளியே நடந்த இந்த தாக்குதல், குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று பொலிஸார் கருதுகின்றனர்.

சுமார் 100 விருந்தினர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், அதிகாலை ஒன்று கார் வந்து நின்றது. அதிலிருந்து தானியங்கி துப்பாக்கிகளை ஏந்திய மூன்று முகமூடி அணிந்த ஆயுததாரிகள் வெளியேறினர். மேலும் அரங்கத்தின் வெளியே நின்று கொண்டிருந்த 3 விருந்தினர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் என அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஒருவர் பலி, 5 பேர் காயம்
உயிரிழந்தவர் 30 வயதுடையவர் எனவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாகவும் உள்ளூர் செய்தித்தாள் குறிப்பிடுகிறது. மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். ஒரு கர்ப்பிணி பெண் மற்றும் மற்றொரு நபர் லேசான காயங்களுடன் உள்ளனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த துருக்கிய திருமண விருந்தினர்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This