“கண்களாகவும் காதுகளாகவும் இருக்கப் போகிறார்கள்“; தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்

“கண்களாகவும் காதுகளாகவும் இருக்கப் போகிறார்கள்“; தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணியகம் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக ஒன்பது மாகாணங்களிலும் 26 கண்காணிப்பாளர்களை (LTOs) ஈடுபடுத்தியுள்ளது.

அவர்கள் ஒவ்வொரு மாகாணத்திற்கும் சென்று கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என தலைமை கண்காணிப்பாளரும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினருமான நாச்சோ சான்செஸ் அமோர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கண்காணிப்பாளர்கள் தங்கள் கண்களாகவும் காதுகளாகவும் இருக்கப் போகிறார்கள் என்றும் அவர்கள் தேர்தல் செயன்முறையின் ஒவ்வொரு அம்சத்தையும் உன்னிப்பாக அவதானிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதித் தேர்தலின் சட்ட நடைமுறை, நிதி, ஊடகம் மற்றும் சமூக ஊடகங்கள், பாதுகாப்பு மற்றும் நடமாட்டம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய 10 நிபுணர்களைக் கொண்ட முக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்கள், தேர்தல் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகத்தை நகரங்களில் மட்டுமல்லாது, சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் கண்காணிப்பாளர்கள் சந்திப்பார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.

CATEGORIES
Share This