குஜராத்தில் கனமழை- வெள்ளப்பெருக்கு; 28 பேர் பலி
குஜராத்தில் ஏற்பட்டுள்ள மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 28 பேர் பலியாகியுள்ளனர்.
கடும் மழைக் காரணமாக 30,000 இற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழைக் காரணமாகப் பல கங்கைகள் மற்றும் நீர்நிலைகள் பெருக்கெடுக்கும் நிலையை எட்டியுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் ஆழ்ந்த காற்றழுத்தம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அரபிக்கடலில் கலக்கும் என்றும், நாளைக் கடற்கரையை விட்டு நகரும்போது சற்று வலுவடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுமா இல்லையா என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிடவில்லை.