பொது இடங்களில் பெண்கள் முகத்தை மூடணும், பேசக்கூடாது..; அடுத்தடுத்து தலிபான்களின் தடாலடி!

பொது இடங்களில் பெண்கள் முகத்தை மூடணும், பேசக்கூடாது..; அடுத்தடுத்து தலிபான்களின் தடாலடி!

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் 2021 முதல் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஆட்சிப் பொறுப்பு ஏற்கும் முன்பு தலிபான்கள், தங்களின் ஆட்சி முந்தைய ஆட்சி போல் கொடூரமாக இருக்காது என்றனர். ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி நடத்தப்படும் எனக்கூறிய அவர்கள் பிறகு நாளுக்கு நாள் கட்டுப்பாடுகளை விதிக்க துவங்கி உள்ளனர்.

இந்நிலையில் தலிபான்கள் அடுத்ததாக புதிய விதிகளை அமல்படுத்தி உள்ளனர். இதற்காக அவர்கள் 114 பக்கங்கள் கொண்ட ஆவணத்தை வெளியிட்டு உள்ளனர். அதில் 13வது பத்தியில், பொது இடத்தில் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனக்கூறப்பட்டு உள்ளது.

புது உத்தரவு

அதில்*பொது இடங்களில் மற்றவர்கள் சலனப்படுவதை தடுக்க பெண்கள் அனைவரும் முகத்தையும், உடலையும் முழுவதுமாக மூட வேண்டும்.

*பெண்கள் பொது இடத்தில் பாடுவதோ, சத்தமாக படிக்கவோ கூடாது. ஒரு பெண்ணின் குரல் தனிப்பட்டதாக கருதப்படுகிறது. மற்றவர்கள் கேட்கக்கூடாது என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதேபோல், பொதுஇடத்தில் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

*ரத்த சொந்தம் இல்லாது அல்லது உறவினர் அல்லாத ஆண்களை பார்க்கக்கூடாது.

கவலை தருகிறது களநிலை; நல்ல நகைச்சுவை சொல்கிறார் முதல்வர்; அமெரிக்க பயணம் பற்றி அன்புமணி கேள்வி

  • ஆண்கள் தாடி வளர்க்க வேண்டும்.

*ஆண்கள் மத வழிபாட்டு நிகழ்வுகளை தவிர்க்கக்கூடாது.

*கார் டிரைவர்கள் பாடல்களை ஒலிக்க விடக்கூடாது

*கார்களில் பெண்கள் தனியாக செல்லக்கூடாது. அவர்கள் தொடர்பு இல்லாத இடங்களில் கலந்து கொள்ளக்கூடாது.

*தீங்கு விளைவிக்கும் நபர்களின் புகைப்படங்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது, என அதில் கூறப்பட்டு உள்ளது.

தலிபான் தலைவரான ஹிபத்துல்லா அகுந்த்சாதாவால் அங்கீகரிக்கப்பட்ட இந்த விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக அறிவித்து உள்ளனர். இந்த விதிகள் பின்பற்றப்படுகிறதா என கண்காணித்து வரும் அமைச்சகம், இதனை மீறியதற்காக ஆயிரகணக்கானோரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஐ.நா., கவலை
தலிபான்களின் இச்சட்டம், பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கையை இன்னும் கடினமாக்கும் என ஐ.நா., அமைப்பு கவலை தெரிவித்து உள்ளது.

CATEGORIES
Share This