பிரதான வேட்பாளர்களின் சொத்து மதிப்பீடு: லஞ்ச ஊழல் தொடர்பான ஆணைக்குழு பகிரங்கப்படுத்தியது

பிரதான வேட்பாளர்களின் சொத்து மதிப்பீடு: லஞ்ச ஊழல் தொடர்பான ஆணைக்குழு பகிரங்கப்படுத்தியது

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள 38 வேட்பாளர்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்னிலைப்படுத்தியுள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிக்கைகள் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மூலம் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

“சில சொத்துக்களின் ரகசியத்தன்மையை பாதுகாத்து, வேட்பாளர்கள் சொத்து மதிப்பு வெளியிடப்பட்டுள்ளது” என தலைப்பிட்டு கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள நாளிதழான “திவயின” செய்தி வெளியிட்டுள்ளது.

ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 88 (1) சரத்துக்களின் படி, வெளியிடக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் தவிர ஏனைய தகவல்களுடன் அமைக்கப்பட்ட ஆவணமொன்று ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ பக்கத்தின் ஊடாக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தகவல்களின்படி, பிரதான வேட்பாளர்களின் சொத்து மதிப்பு இவ்வாறு அமைந்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சம்பளமாக 97,500 ரூபாயும் இரு பென்ஸ் ரக வாகனங்களும் ஜீப் வண்டியொன்றும் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் சம்பளமாக 295,681.14 ரூபாய் குறிப்பிடப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச பயன்படுத்தும் வாகனங்களாக இரு டபல் கப் வண்டிகள் மற்றும் லேண்ட் க்ரூசர் ஜீப் வண்டியொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க மாதாந்த சம்பளம் 202,517.34 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. டொயோடா ஹய்லேக்ஸ் டபல் கப் வண்டியொன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் சம்பளம் 454,285 ரூபாய் என தெரவிக்கப்பட்டுள்ளது.

டொயோடா லேண்ட் க்ருசர் ஜீப் வண்டி பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் சம்பளம் 280,000 ரூபாயும் லோட்டஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் எனும் ரீதியில் மாதாந்தம் 1,345,000 ரூபாய் பெறப்படுகிறது. டொயோடா வி 8 ரக வாகனம் பயன்படத்தப்பட்டு வருகிறது.

ஜனக ரத்நாயக்கவின் மாதாந்த சம்பளமாக 2,50,000 ரூபாயும் பயன்படுத்தும் வாகனங்களாக போர்ட் ஜீப் வண்டி ஒன்றும் மற்றும் பென்ஸ் வண்டியொன்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரத் பொன்சேக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு 54,825 ரூபாய் மற்றும் வரப்பிரசாதமாக 263,500 ரூபாய் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொடீயடா லேண்ட் க்ரூசர் வாகனம் பயன்படுத்தப்படுகிறது.

திலித் ஜயவீரவின் மாதாந்த வருமானம் 16,500,000 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் பயன்படுத்தும் வாகனம் தொடர்பில் வெளிப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Oruvan
CATEGORIES
Share This