யாருக்கு ஆதரவென செப்.20 இலும் தமிழரசின் முடிவை அறிவிக்கலாம்

யாருக்கு ஆதரவென செப்.20 இலும் தமிழரசின் முடிவை அறிவிக்கலாம்

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் அறிவிப்பதற்கு தாம் அவசரப்படவில்லை என்றும், வேட்பாளர்கள் அனைவரினதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியான பின்னரே அது தொடர்பில் தீர்மானிப்போம் என்றும் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றின் போது, ஜனாதிபதித் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சுமந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

சகல வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியான பின்னர் அவை தொடர்பில் ஆராய்ந்து யாருக்கு ஆதரவை வழங்குவதென்று நாங்கள் தீர்மானிப்போம். இதற்கு முன்னர் நடந்த ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னரே யாருக்கு ஆதரவு என்பதனை கூறியுள்ளோம். எங்களின் வேட்பாளர் எவரும் போட்டியிடாத காரணத்தினால் எங்களுக்கு இதில் அவசரம் கிடையாது. செப்டம்பர் 20ஆம் திகதி வேண்டுமென்றாலும் எங்களின் நிலைப்பாட்டை அறிவிக்கலாம் என்றார்.

CATEGORIES
Share This