பாகிஸ்தானில் நடந்த பயங்கரம்: 11 பொலிஸார் பலி

பாகிஸ்தானில் நடந்த பயங்கரம்: 11 பொலிஸார் பலி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டுகளுடன் ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் பொலிஸ் குழுவொன்றின் மீது பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் குறைந்தது 11 அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வியாழன் மாலை ரஹீம் யார் கான் மாவட்டத்தின் கச்சா நகரில் நடந்த இந்தத் தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.

லாகூரில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரஹீம் யார் கான் மாவட்டத்தில் செயல்படும் கொள்ளையர்களைத் தேடி வெறிச்சோடிய பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கி ஏந்தியவர்கள் கொள்ளையர்களாக இருக்கலாம் என்றும் அவர்கள் ஆயுதம் ஏந்திய குழுவைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாகிஸ்தானின் தெற்கில் உள்ள பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்தில் கொள்ளையர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் அடிக்கடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

அவர்கள் கிராமப்புறங்களிலும், வனப்பகுதிகளிலும் ஒளிந்துகொண்டு சில சமயங்களில் கடத்தல்களை நடத்தி பணம் சம்பாதிக்கிறார்கள்.

அவர்கள் கடந்த சில மாதங்களாக மேற்கொண்ட தாக்குதல்களில் பல பொலிஸ் அதிகாரிகளையும் கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.

CATEGORIES
Share This