‘பேபி’ நாமலுக்கு அரசியல் தெரியாது; ஜே.வி.பி.கடும் சாடல் 

‘பேபி’ நாமலுக்கு அரசியல் தெரியாது; ஜே.வி.பி.கடும் சாடல் 

பேபி நாமல் 13 ஐ மறுப்பதற்கு முன் அப்பாவிடம் வரலாற்றை கேளுங்கள் .இனவாதப் பேச்சை சிங்கள் சகோதரர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள்.. ஜே.வி.பி. சந்திரசேகரன்.

ஜனாதிபதி வேட்பாளரான பேபி நாமல் ராஜபக்ஷ தோல்வி அடையும் வேட்பாளராக உள்ள நிலையில் இனவாதத்தை கிளப்பி ஆறுதல் தோல்வியை அடையப் பார்க்கிறார் என ஜே.வி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

நேற்று யாழில் வர்த்தக சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஆட்சியில் ராஜபக்க்ஷ குடும்பத்தை மக்கள் விரட்டியடித்து யாவரும் அறிந்த நிலையில் அந்த குடும்பத்தின் பேபி நாமல் ராஜபக்ஷ தெற்கில் கூறிய கருத்து ஊடகங்களில் பேசுபோருளாக இருக்கிறது.

அதாவது மாகாண சபைகளுக்கு காணி பொலிஸ் வழச்கமாட்டோம், வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை என நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அவரிடம் கேட்க விரும்புகிறேன், அப்பா மகிந்த 13 க்கு அப்பால்(13 பிளஸ்) சென்று தீர்வு தருவதோடு மாகாண சபை அதிகாரங்களை பலப்படுத்த வேண்டும் எனக் கூறியவர்.

ராஜபக்ச குடும்பம் அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்த நிலையில் அவரின் பிள்ளையான நாமலை வைத்து அரசியல் புத்தெழுச்சி பெறலாம் என தப்புக் கணக்கு போடக் கூடாது.

நாட்டை அழித்த ராஜபக்ச கும்பலை சிங்கள சகோதரர்கள் நாட்டை விட்டு துரத்திய நிலையில் பேபி நாமலின் உசுப்பேத்தல் பேச்சுக்களை சிங்கள சகோதரர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள்.

தெற்கில் இனவாதிகளாக கருதப்பட்ட வீரவன்ச மற்றும் கம்மன்பிலவுக்கு பதிலாக தற்போது ஜனாதிபதி வேட்பாளரான நாமல் சிறு பிள்ளை விளையாட்டை ஆரம்பித்துள்ளார்.

மலராத மொட்டு, தேர்தலிலும் மலராது இது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். இதனை ராஜபக்க்ஷ வேட்பாளருக்கு மக்கள் உணர்த்துவார்கள்.

ஆகவே பேபி நாமல், 13 ஐ மறுப்பதற்கு முன் அப்பாவிடம் வரலாற்றை கேட்டு பொது வெளியில் பேச வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This