பைபிள் விற்பனையின் மூலம் டொனால்ட் டிரம்ப்புக்கு 3 இலட்சம் டொலர் வருவாய்

பைபிள் விற்பனையின் மூலம் டொனால்ட் டிரம்ப்புக்கு 3 இலட்சம் டொலர் வருவாய்

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர்களின் சொத்து விவரங்களை அமெரிக்க தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. அதன்படி ரியல் எஸ்டேட் முதல் கிரிப்டோகரன்ஸி வரையில் பல தளங்களில் டிரம்ப் முதலீடு செய்துள்ளார். அவர் வசமுள்ள கிரிப்டோகரன்ஸியின் மதிப்பு 10 இலட்சம் டொலர் ஆகும். அதேபோல், பைபிள் விற்பனை மூலம் 3 இலட்சம் டொலர் வருவாய் ஈட்டியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ள டிரம்ப்,தான் கலந்துகொள்ளும் கூட்டங்களில் ‘காட் பிளஸ் த யுஎஸ்ஏ’ என்று பெயரிடப்பட்டுள்ள பைபிளை விற்பனை செய்துவருகிறார். இந்த பைபிளின் விலை 60 டொலர் ஆகும்.

CATEGORIES
Share This