இந்தியா- பாகிஸ்தான் பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க ஊக்குவிப்போம் – அமெரிக்கா

இந்தியா- பாகிஸ்தான் பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க ஊக்குவிப்போம் – அமெரிக்கா

பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்ட நபர்களை இந்திய உளவுத்துறையினர் பாகிஸ்தான் மண்ணில் சுட்டுக்கொன்றதாக பிரித்தானியப் பத்திரிகை ஒன்று பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டிருந்தது.

“இது தவறானது மற்றும் இந்தியாவிற்கு எதிராக செய்யப்படும் பொய் பிரசாரம்” என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அந்த செய்திக்கு கடந்த வாரம் தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், “இந்த விவகாரம் குறித்து மீடியா தகவல்களை பார்த்தோம். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து எங்களிடம் எந்த கருத்தும் இல்லை. இந்த சூழ்நிலையில் நாங்கள் தலையிட போவதில்லை. ஆனால், இருதரப்பினரையும் பதற்றத்தை தணிக்கவும், பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் ஊக்கப்படுத்துகிறோம்” என்றார்.

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பிரச்சனையில் மற்ற நாடுகள் கருத்து கூறுவதை இந்தியா விரும்புவதில்லை. காஷ்மீர் குறித்து கருத்து தெரிவித்தார், இந்த தங்களுடைய நாட்டின் உள்விவகாரம் என இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This