பாட்டலியும் சஜித் பக்கம் சாய்வாரா?: தீர்மானம் இன்று

பாட்டலியும் சஜித் பக்கம் சாய்வாரா?: தீர்மானம் இன்று

தமது கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் இன்று (10) தீர்மானிக்கவுள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதன்படி, இன்று மாலை அக்கட்சியின் மத்தியக் குழு கூட்டம் மற்றும் தேசிய சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்குவதா அல்லது கட்சியிலிருந்து வேட்பாளர் ஒருவரை முன்வைப்பதா என்ற காரணம் தொடர்பில் இன்று (10) தீர்மானிக்கவுள்ளதாக அந்த பேச்சாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர், பாட்டலி சம்பிக்க ரணவக்க கடந்த 6ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்தோடு, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் புதிய கூட்டணியின் தலைவர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் சிலருடன் கடந்த தினங்களில் அவர் கலந்துரையாடியிருந்தார்.

அங்கு அரசியல் சபையின் 10 உறுப்பினர்களுள் 7 பேர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பதே கருத்தாக இருந்தது என அக்கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், அரசியல் சபையில், சட்டத்தரணி ஷிரால் லக்திலக தற்போது சஜித்துக்கு எதிராக பிரசித்தமாக கருத்து வெளியிட்டு வருகிறார்.

இது தொடர்பில் மேலும் விவாதித்து உடன்பாடு எட்டுவதற்கு கட்சியின் தேசிய குழு மற்றும் மத்திய குழு கூடவுள்ளது.

அக்கட்சியின் மத்திய குழுவில் 85 உறுப்பினர்களும், தேசிய குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 108 ஆகவும் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This