”கோ ஹோம் கோதா” போராட்டத்தை நினைவுபடுத்தும் “பங்களாதேஷ்”

”கோ ஹோம் கோதா” போராட்டத்தை நினைவுபடுத்தும் “பங்களாதேஷ்”

பங்களாதேஷில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை 2022இல் இலங்கையில் இடம்பெற்ற ”கோ ஹோம் கோதா” போராட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பங்களாதேஷில் இடம்பெறும் போராட்டத்தில் நடைபெறும் ஒவ்வொரு சம்பவமும் இலங்கையில் நடந்ததை போன்றே உள்ளது.

இலங்கையில் 2022 மே 9ஆம் திகதிக்கு பின்னர் கோதாபயவுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து ஜுலை 9 ஆம் திகதி அவர் நாட்டை விட்டு வெளியேறிச் சென்று, வெளிநாட்டில் இருந்தவாறு பதவி விலகல் தொடர்பில் அறிவித்தார்.

அதேபோன்று பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, போராட்டம் தீவிரமடைந்து அவசரமாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடொன்றுக்கு சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் பதவி விலகல் தொடர்பில் அறிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைகைக்குள் நுழைந்து நடந்துகொண்டதை போன்றே, பங்களாதேஷிலும் போராட்டக்காரர்கள் பிரதமர் மாளிகையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், அதனை சுற்றுலா இடம்போன்று மக்கள் பார்வையிட்டு, அங்கு கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதேவேளை இலங்கையில் ராஜபக்‌ஷக்களின் தந்தையான டீ.ஏ.ராஜபக்‌ஷவின் சிலையை சேதப்படுத்தியதை போன்று பங்களாதேஷிலும் பிரதமரின் தந்தை முஜிபுர் ரஹ்மானின் சிலையை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும் இலங்கையில் போராட்டம் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டது.ஆனால் பங்களாதேஷில் 1971ஆம் ஆண்டு இடம்பெற்ற பங்களாதேஷ் விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலையில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டே போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

CATEGORIES
Share This